search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி கடையில் கொள்ளை"

    மதுரையில் ஜவுளி கடைக்குள் புகுந்த கும்பல் ரூ.1 லட்சம் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளை கொள்ளையடித்துச் சென்றது.
    மதுரை:

    மதுரை தபால்தந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 42). இவர் மகால் சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்துச் சென்று விட்டார். நேற்று காலை கடைக்கு வந்த அவர் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தெற்குவாசல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது ஜவுளிக்கடையின் 3-வது மாடி ஜன்னலை உடைத்து யாரோ உள்ளே வந்திருப்பது தெரியவந்தது.

    கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் மற்றும் கம்ப்யூட்டர், சி.சி.டி.வி. ஆகியவற்றின் ஹார்டு டிஸ்க்குகள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ராஜேந்திரகுமார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எஸ்.எஸ்.காலனி கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த சந்திரன் மனைவி மணிமாலா (44) போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    விராட்டிப்பத்து பகுதியில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் திருமங்கலம் ஊத்துப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார், அவரது மனைவி ஜெயஸ்ரீ, கூடல்நகர் ரமேஷ்குமார், சவுந்தர பாண்டி ஆகியோர் கூட்டாக ஓட்டல் நடத்தி வருகின்றனர்.

    ரூ.5 லட்சம் அட்வான்ஸ், மாத வாடகை ரூ.30 ஆயிரம் என்று பேசி வாடகைக்கு விட்டேன். ஆனால் பணத்தை சரிவர கொடுக்காமல் போலி ஆவணம் தயாரித்து குத்தகையை கால நீட்டிப்பு செய்து 4 பேரும் மோசடி செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×